Description
சாய் மூலிகை கவுனி அரிசி கஞ்சியில் சிவப்பு கவுனி அரிசி, சுக்கு, மிளகு, சீரகம், அதிமதுரம், பால்பெருங்காயம் போன்றவற்றை கொண்டு தயார்செய்யப்பட்டவை. இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். நல்ல செரிமானத்தை ஏற்படுத்தும். சளி, இருமல், காய்ச்சல் போன்ற எந்த ஒரு உடல் உபாதைகள் இருக்கும்போது இதை சாப்பிட விரைவான சக்தி கிடைப்பதுடன் உடலை பாதுகாக்கவும் உதவும். செய்முறை: ஒன்னரை டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் சாய் மூலிகை கவுனி அரிசி கஞ்சியை சேர்த்து 3 – 5 நிமிடம் கொதிக்க வைத்து ( கொதிக்கும்போது கிளறிக்கொண்டே இருக்கவும் ) தேவையான அளவு உப்பு சேர்த்து பருகவும்.